“அன்பு மட்டுமே உலகை உருவாக்குகிறது” - தனுஷ் நன்றி

“அன்பு மட்டுமே உலகை உருவாக்குகிறது” - தனுஷ் நன்றி
“அன்பு மட்டுமே உலகை உருவாக்குகிறது” - தனுஷ் நன்றி

தனது 17 வருட கொண்டாட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனுஷ் தன் நன்றியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’ வெளியாகி 17 ஆண்டுகள் முடிந்துள்ளன. அதனை அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் கொண்டாடித் தீர்த்தனர். அந்தக் கொண்டாட்டத்திற்காக தனுஷ் இன்று நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் அன்பான நண்பர்களே, ‘துள்ளுவதோ இளமை’ 2002 மே 10ல் வெளியானது. இந்த நாள் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

அதற்குள் 17 வருடங்கள் ஆகிவிட்டதா? நேற்று உங்களின் இதயம் திறந்து என்னை வாழ்த்தி இருந்தீர்கள். 17 ஆண்டு கொண்டாட்டத்திற்காக வீடியோ, போஸ்டர்கள் போட்டு வாழ்த்தி இருந்தீர்கள். அதிகப்படியான உற்சாகம், நேர்மையான வாழ்த்து, அன்பு என ஆதர கொடுத்தீர்கள். அன்பு மட்டுமே உலகை உருவாக்குகிறது. 

நடிகராக தாக்குப் பிடித்து நிற்பேனா என்றிருந்த ஒரு சின்ன பையனுக்கு உங்கள் மனதில் இடமளித்த நாள் நேற்று. என்னுடைய தோல்விகளிலும் வெற்றிகளிலும் என்னுடனேயே இருந்த உங்களுக்கு என் ஆழ்மனத்தில் இருந்து நன்றியை கூறிக்கொள்கிறேன். நான் இதற்கு பொருத்தமான நபர் கிடையாது. உங்களது அன்பும் ஆதரவும் என்னைப் பொருத்தமான நபராக இருக்க தூண்டுகிறது” என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com