[X] Close

இன்று ரிலீஸ் ஆக இருந்த ‘அயோக்யா’ படம் திடீர் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்

Vishal-s-Ayokya-movie-was-not-released-for-Some-Issue

விஷால் நடிப்பில் உருவான அயோக்யா திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் திடீரென படம் இன்று ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் அயோக்யா. இன்று திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் முதல் காட்சியை காண ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அயோக்யா படம் வெளியாவது தள்ளி போடப்பட்டுள்ளதாக பி.ஆர்.ஓ ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் விஷால், அயோக்யா ரிலீசுக்காக அனைத்து முயற்சிகளும் எடுத்துவிட்டேன், ஆனால் முடியவில்லை, எனக்கென ஒரு நாள் வரும், அதுவரை என் பயணத்தை தொடர்வேன் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அயோக்யா திரைப்படம் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட பணம், அவரவர் வங்கி கணக்கில் திருப்பி அனுப்பப்படும் என திரையரங்கு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close