அயோத்தி நில விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தர் குழுவுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று உத்தரவிட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் மார்ச் 8ஆம் தேதி நியமித்தது.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மத்தியஸ்தர் குழு பேச்சுவார்த்தை தொடர்பான முதற்கட்ட அறிக்கையை 4 வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 8 வாரங்களில் பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மத்தியஸ்தர் குழு கடந்த 6ஆம் தேதி, சீலிடப்பட்ட கவரில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் இன்று வந்தது.
அப்போது, சமரசப் பேச்சுவார்த்தையை முழுவதுமாக முடிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்தியஸ்தர் குழு கேட்டுக்கொண்டது. இதை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி