[X] Close

கனவு கானல் நீராகவே இருக்கும்: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

CM-Palanisamy-speech-in-Salem

ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற திமுக மற்றும் பிரிந்து சென்ற அணியினரின் கனவு கானல் நீராகத்தான் இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

சேலத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், நிதிப்பற்றாக்குறையிலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறினார். தான் தனது உழைப்பினால், மக்களோடு மக்களாக இருந்து பொறுப்பிற்கு வந்தவன் என்று கூறிய பழனிசாமி, தந்தையின் ஆதரவினால் மட்டுமே பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் என்றும் சாடினார்.

இரு அணிகள் இணைவதற்காக பேச்சுவார்த்தைக்கு வேண்டுமென்றே ஒரு சிலர் முட்டுக்கட்டை போடுவதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற திமுக மற்றும் பிரிந்து சென்ற அணியினரின் கனவு கானல் நீராகத்தான் இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close