Published : 10,May 2019 03:51 AM

''நான் ஏன் இப்படி செய்தேன்; தெரியவில்லை'' - கெஜ்ரிவாலை தாக்கியவர் வருத்தம்!

-Don-t-Know-Why-I-Did-This---Says-Man-Who-Slapped-Arvind-Kejriwal

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கியதற்காக வருத்தமடைவதாக தாக்கிய நபர் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, சுரேஷ் என்பவர், யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சித் தொண்டர்கள் கெஜ்ரிவால் நின்றிருந்த ஜீப்பில் இருந்து சுரேஷை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். விசாரணையில், கட்சித் தலைவர்களின் அணுகுமுறையால் மிகுந்த அதிருப்தி அடைந்து கெஜ்ரிவாலை அவர் தாக்கியதாக தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சம்பவம்  குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேசிய சுரேஷ் சிறையில் இருந்த போது தன் தவறை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ''அன்று ஏன் அப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. என்னை யாரும் தூண்டிவிடவும் இல்லை. போலீசார் என்னிடம் கண்ணியமாக நடந்துகொண்டனர். என் தவறை சுட்டிக்காட்டி புரியவைத்தனர்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இதுவரை 9 முறை தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்திய வரலாற்றில் இத்தனை முறை ஒரு முதல்வர் மீது தாக்குதல் நடந்திருக்காது என்றும் தெரிவித்து இருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்