[X] Close

தாறுமாறாக பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் கைது

Driver-arrested-for-over-speed

கோவை அருகே போட்டிப் போட்டுக்கொண்டு அதிவேகமாக இயக்கப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14 தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

கோவையில் மக்களின் உயிரோடு விளையாடும் வகையில், தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வரும் நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், இரு பேருந்துகள் தாறுமாறாக இயக்கப்படுவதும், எதிரே வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்வதையும் பார்க்க முடிந்தது.

புதிய தலைமுறையில் இதுபற்றி செய்தி வெளியானதை தொடர்ந்து, இரு பேருந்து ஓட்டுநர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் நாகராஜ், வைரமுத்து ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியது, பொதுமக்களை அச்சுறுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Advertisement

இதனிடையே, கிணத்துக்கடவு பகுதியில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், அஜாக்கிரதையாக இயக்கப்பட்ட 14 தனியார் பேருந்துகளை தடுத்து நிறுத்தி அதன் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Advertisement

Advertisement
[X] Close