இரண்டு இளம் பெண்கள் கொடுத்த பாலியல் புகாரை அடுத்து, இந்திய ’யோகா குரு’ ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிராயக் ராஜைச் சேர்ந்தவர் ஆனந்த் கிரி (38). அங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் ஒன்றின் மடாதிபதியாக இருக்கும் இவர், ஆன்மீக வகுப்புகளையும் யோகா பயிற்சியையும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றிருந்த அவர் அங்கு ஆன்மிகம் மற்றும் யோகா பயிற்சி அளித்து வந்துள்ளார். அவர் மீது இரண்டு பெண்கள் கொடுத்த பாலியல் புகாரை அடுத்து கைது செய்யப்பட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் ஆஸ்திரேலியா சென்ற போது, நியூ சவுத் வேல்ஸ் நகரின் புறநகர் பகுதியான ரூட்டின் ஹில் என்னும் இடத்தில் 29 வயது தென்னிந்திய பெண் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் அவர் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் திங்கட்கிழமை இந்தியா திரும்ப இருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்