திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் : தங்க தமிழ்செல்வன்

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் : தங்க தமிழ்செல்வன்
திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் : தங்க தமிழ்செல்வன்

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுகவின் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத்தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 

இதனிடையே திமுகவும் அமமுகவும் கூட்டு சேர்ந்துள்ளனர் என ஆளுங்கட்சியான அதிமுகவும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவும் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு அமமுக சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் தேனியில் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். 23 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும். 22 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும். அப்போது திமுக ஆட்சியை கலைக்க எங்களுக்கு உதவ வேண்டும். ஆனால் திமுக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தர மாட்டோம்.

பொதுத்தேர்தலை சந்தித்து அமமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அம்மாவுடைய ஆட்சியை அமைக்கும். அதிமுக ஆட்சியை கலைக்க திமுக ஆதரவு தரவில்லையென்றால் அவர்கள் எங்களை பார்த்து பயந்து விட்டார்கள் என்று அர்த்தம்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com