[X] Close

''ஆமா... இது யாரு?'' - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் மெட்காலா கெட்டப்!

Priyanka-Chopra-And-Deepika-Padukone-Slay-The-Red-Carpet-on-Met-Gala

மெட்காலா நிகழ்வில் பங்கேற்ற நடிகை பிரியங்கா சோப்ராவின் கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


Advertisement

உலக அளவில் உள்ள திரைப்பட நடிகர்களையும், ஆடை வடிவமைப்பாளர்களையும் ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சியாக மெர்காலா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 1948 முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆடை வடிவமைப்பு தொடர்பான நிறுவனங்களின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 


Advertisement

இதில் உலக அளவில் பிரபலமான நடிகர், நடிகைகள் வித்தியாசமான ஆடைகளுடன் பங்கேற்று கவனம் பெறுகின்றனர். அதன்படி அமெரிக்க எழுத்தாளன் சுஷன் சண்டேக் எழுதிய 'நோட்ஸ் ஆன் கேம்ப்' என்பதை அடிப்படையாகக் கொண்டு "Camp: Notes on Fashion" என்ற கருப்பொருளை மையமாக வைத்து  இந்த வருடத்துக்கான மெட்காலா கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா நிகழ்வில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ராவின் கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வித்தியாசமான ஹேர் ஸ்டைல், அதன் மீது ஒரு கிரீடம், மிணுமிணுக்கும் ஆடை, கண்கள் ஓரம் பளபளக்கும் வெண்ணிற மேக்கப் என முழுவதுமாக மாறி வந்த  பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தை பலரும் கலாய்த்தும், மீம்ஸ் போட்டும் வருகின்றனர். 


Advertisement

பிரியங்கா சோப்ரா அளவுக்கு வித்தியாசத்தைக் காட்டவில்லை என்றாலும் தீபிகா படுகோனுக்கும் ஆங்காங்கே மீம்ஸ் பறந்து கொண்டு இருக்கின்றன. ஹாலிவுட்டைச் சேர்ந்த நடிகர் நடிகைகளை பார்க்கும்போது இந்திய நடிகைகளின் கெட்டப் பரவாயில்லை என்றும் ஆறுதலாகவும் பலர் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
 


Advertisement

Advertisement
[X] Close