தங்களது வீட்டில் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறைகளிலும் இருந்து கட்டுக்கட்டாக பலகோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியாகும் செய்தி உண்மையானது அல்ல என்று லீமா ரோஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினை கொல்கத்தா விமான நிலையத்தில் பிடித்த, வருமான வரித்துறை அதிகாரிகள், அவருக்குச் சொந்தமான வீடு, சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். கோவை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், கவுகாத்தி, சிலிகுரி உள்ளிட்ட 70 இடங்களில் சோதனை நடைபெற்றது.
ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, கணக்கில் வராத 595 கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், 619 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப்பட்டவைக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகத் தெரிகிறது. இதேபோல, கணக்கில் வராத 5 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கம், சுமார் 24 கோடியே 57லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வீட்டின் மேற்கூரை, மரப்படிக்கட்டுகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீடியோவையும் கட்டிலுக்கு அடியில் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த காட்சியையும் வருமான வரித்துறை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தங்களது வீட்டில் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறைகளிலும் இருந்து கட்டுக்கட்டாக பலகோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியாகும் செய்தி உண்மையானது அல்ல என்று லீமா ரோஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மார்ட்டின் குழும நிறுவனங்கள், ஊழியர்களின் இல்லங்கள் மற்றும் தங்கள் வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது என்றும், அதில் 98 ஆயிரத்து 820 ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து வருமான வரித்துறையினர் வழங்கிய படிவத்தை வெளியிட்டுள்ள லீமா ரோஸ் மார்ட்டின், வீட்டின் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறையிலும் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai