Published : 30,Apr 2017 03:23 AM

காதலி பர்த் டே: கோலி ஜாலி!

anushka-sharma-birthday--Virat-Kohli-happy

தனது காதலி பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, தனது திருமணம் பற்றி அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு நாளை பிறந்த 29 வது பிறந்த நாள். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் அனுஷ்காவும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். இருவரும் ஒன்றாகச் சுற்றி வந்தாலும் அதைப் பற்றி இருவருமே இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையில் அனுஷ்காவில் பிறந்தநாள் நாளை வருகிறது. காதலிக்காக கோலி ஏதாவது ஸ்பெஷல் பார்ட்டி வைக்கிறாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் அனுஷ்காவின் இந்த பிறந்த நாளில் தனது காதலையும் திருமணம் பற்றியும் அவர் அறிவிக்கலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

விராத் கோலியின் கடந்த பிறந்த நாளன்று ராஜ்கோட்டில் விளையாடிக்கொண்டிருந்த அவரைத் தேடிப் போய் அனுஷ்கா வாழ்த்துச் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்