"என் கையை பிடித்து காங்கிரஸ்க்கு வாக்களிக்கும்படி நிர்பந்தித்தனர்"- பெண் வாக்காளர் புகார்

"என் கையை பிடித்து காங்கிரஸ்க்கு வாக்களிக்கும்படி நிர்பந்தித்தனர்"- பெண் வாக்காளர் புகார்
"என் கையை பிடித்து காங்கிரஸ்க்கு வாக்களிக்கும்படி நிர்பந்தித்தனர்"- பெண் வாக்காளர் புகார்

தன் கையை பிடித்து காங்கிரஸ் கட்சிக்கான பொத்தானை அழுத்த நிர்பந்தித்ததாக அமேதி தொகுதி பெண் வாக்காளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு 5-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியும் அடங்கும்.  இந்நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கான பொத்தானை அழுத்த கையை பிடித்து நிர்பந்தித்ததாக பெண் வாக்காளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் தான் பாஜகவிற்கு வாக்களிக்க விரும்பியதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த வீடியோவை அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் ராகுல்காந்தி வாக்குச்சாவடியை கைப்பற்றுவதிலும் ஈடுபட்டுள்ளதாக ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com