மாஸ்கோவில் தீவிபத்தில் சிக்கிய விமானத்தின் உள்ளிருந்து பயணி ஒருவர் எடுத்த அலறல் வீடியோ சமூக வலத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்கோவில் இருந்து முர்மான்ஸ்க் பகுதிக்கு 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் ஏரோஃப்ளோட் என்ற விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது .
இதையடுத்து விமானம் அவசரமாக மாஸ்கோ விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. அப்போது ஓடுதளத்தில் வந்து கொண்டிருந்த போது விமானத்தில் தீ பிடித்தது. அது மளமளவென்று பற்றத் தொடங்கியது. உடனடியாக நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்தது அவசர கால வழி வழியாக, பயணிகள் அலறியடித்து குதித்தனர். அவர்கள் அலறியபடி ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி யுள்ளன. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 41 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் காயங்க ளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பற்றி எரியும் விமானத்தின் உள்ளிருந்து பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதில் ஜன்னலுக்கு வெளியே தீ மளமளவென பற்றி எரிவதும், பெண்கள் உள்ளிட்ட பயணிகளின் அலறல் சத்தமும் கேட்கிறது. நெஞ்சம் பதை பதைக்க வைக்கும் இந்த வீடி யோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
JUST IN: Video shows horror inside burning passenger plane which made an emergency landing at Sheremetyevo Airport in Moscow. The fire killed at least 13 people, including 2 children: pic.twitter.com/YE4h4B2EeC — Live Report (@tweetlivereport) May 5, 2019
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!