Published : 29,Apr 2017 04:52 PM

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் சமன்

Hockey-Match-Draw

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான -முதல் போட்டி சமனில் முடிவடைந்தது.

மலேசியோவில் இபோ நகரில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா இரு கோல்கள் அடித்தன. இந்திய அணிக்காக ஆகாஷ் தீப் 19-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். சற்று நேரத்தில் இங்கிலாந்து வீரர் டாம் கார்சன் கோல் அடித்து சமன் செய்தார். 47-வது நிமிடத்தில் மன்தீப் சிங் இந்திய அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். சிறிது நேரத்தில் இங்கிலாந்து அணியும் மற்றொரு கோல் அடித்தது. இந்தியா, இங்கிலாந்து உடன் மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தப்போட்டித் தொடரில் கலந்து கொண்டுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்