
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைப்பெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய புனே அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மித்(45), திவாரி(44)ரன்கள் குவித்தனர்.
பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது. ஒற்றை வீரராக கேப்டன் கோலி 55 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.