Published : 04,May 2019 08:59 AM
நடு ரோட்டில் பைக்கில் ‘லிப்லாக்’ கொடுத்த ஜோடி - சர்ச்சை வீடியோ

அபாயகரமான முறையில் இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு முத்தமிட்டுக்கொண்டே போகும் இளம்ஜோடியின் வீடியோவை பகிர்ந்த போலீஸ் அதிகாரி, சாலை விதிகளுக்கான சட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டுமென்று ட்வீட் செய்துள்ளார்.
மேற்கு டெல்லியில் உள்ள ராஜோரி - கிர்டி நகர் சாலை சந்திப்பு அதிக வாகன நெரிசல் உள்ள பகுதி. அப்பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இளம்ஜோடி ஆபத்தை உணராமல் அபாயகரமான முறையில் வாகனத்தில் அமர்ந்துக்கொண்டே முத்தமிட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.
அதாவது அப்பெண் இருச்சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்துகொண்டு வண்டி ஓட்டும் ஆண் நண்பருக்கு முத்தமிட்டிக் கொண்டிருக்க, ஆண் நண்பர் வேகமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டே போகிறார்.
இதனைப் பின்னால் காரில் வந்த காவல் அதிகாரி தலிவால் வீடியோவாக பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் சாலை விதிகளுக்கான சட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டுமென்று ட்வீட் செய்துள்ளார்.
சாலை விதிகளை மதிக்காமல் ஆபத்தான முறையில் இப்படி பயணம் செய்த அந்த ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.