Published : 02,May 2019 06:49 AM
சேலத்தில் ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

சேலம் அருகே காரிபட்டியில் பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சேலம் காரிபட்டி அருகே கதிர்வேலை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது காவல்துறையினரை ரவுடி கதிர்வேல் தாக்கியதாக தெரிகிறது. இதில் சில காவலர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் ரவுடி கதிர்வேலை காவல்துறையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, கதிர்வேலை பிடிக்க முயன்றோம். ஆனால் அவர் தாக்குதல் நடத்த முற்பட்டதால் என்கவுண்ட்டர் செய்ய வேண்டியதாயிற்று என தெரிவித்தனர். சேலத்தில் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டடுள்ள நிலையில் தற்போது ஒரு ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.