[X] Close

அது பனிமனிதன் கால்தடமல்ல கரடியின் கால்தடம்- நேபாள் ராணுவம் தகவல்

Not-Yeti--a-bear---s-footprint--Nepal-to-Indian-Army

இமயமலையில் இந்திய ராணுவம் கண்டது பனிமனிதன் எனப்படும் எட்டியின் கால்தடம் இல்லை என்றும் அது கரடியின் கால்தடம் எனவும் நேபாள் தெரிவித்துள்ளது.

இமயமலைகளில் பனிமனிதன் வாழ்ந்து வருவதாக நீண்ட காலமாகவே கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. எட்டி எனப்படும் அந்த பனிமனிதன், சராசரி மனிதனை விட பெரிய அளவில் இருப்பான் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை யாரும் நேரில் பார்த்திராத நிலையில் பனி மனிதன் குறித்து பல மர்மமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.


Advertisement

இதனிடையே சமீபத்தில் இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தது. அதாவது மாகலு – பருண் எல்லைப் பகுதியில் மர்மமான பனிமனிதன் போன்ற காலடித்தடத்தை கண்டதாகவும், இது 32x15 இன்ஞ் அளவு கொண்டது எனவும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் பனிமனிதன் விவகாரம் மீது மீண்டும் சூடிபிடிக்கத் தொடங்கியது.

இந்நிலையில்  இந்திய ராணுவம் கண்டது பனிமனிதன் கால்தடம் இல்லை என்றும் அது கரடியின் கால்தடம் எனவும் நேபாள் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய நேபாள் ராணுவ செய்தித்தொடர்பாளர், “ இந்திய ராணுவத்தினருக்கு பனிமனிதனின் நடமாட்டம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது. காலடித் தடம் குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து இதன் உண்மைத் தன்மையை அறிய நாங்களும் முயற்சி செய்தோம். ஆனால் நேபாள் உள்ளூர் மக்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் அதனை கரடியின் கால்தடம் என்பதை உறுதி செய்துள்ளனர். இதுபோன்ற கால்தடம் அடிக்கடி அப்பகுதியில் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்” என தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close