[X] Close

"திமுகவே உண்மையான காவலாளி" : மே தின பேரணியில் ஸ்டாலின் பெருமிதம்

DMK-Leader-MK-Stalin-is-Speechi-in-May-Day-rally-at-Thoothukudi

தூத்துக்குடியில் நடைபெற்ற மே தின பேரணியில் சிவப்புச்சட்டை அணிந்து பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தொழிலாளர்களை பாதுகாக்கும் உண்மையான காவலாளி திமுக என பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Advertisement

தூத்துக்குடியில் தொமுச-வின் மே தின பேரணி நடைபெற்றது. மே தின பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின் சிவப்புச்சட்டை அணிந்து பங்கேற்றார். அதே பேரணியில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி உள்ளிட்டோரும் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தனர். ஊர்வலமாகச் சென்ற ஸ்டாலின் மே தின நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.


Advertisement

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தால்தான் உரிமைகள் வந்து சேரும் என்றார். நாட்டின் காவலாளி என பிரதமர் மோடி கூறிக்கொண்டாலும், திமுகவே உண்மையான காவலாளியாக செயல்படுவதாக கூறினார். மேலும் தொழிலாளர்களை பாதுகாக்கும் உண்மையான காவலாளி திமுக என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Related Tags : ThoothukudiMay Day rallyDMKதிமுகMK Stalin

Advertisement

Advertisement
[X] Close