Published : 30,Apr 2019 07:59 AM

திருமண விருந்தில் குறை கூறிய நபரை அடித்துக்கொன்ற கும்பல்!

Man-complains-of-small-portion-at-wedding-feast--is-killed

திருமண விருந்து குறித்து குறை கூறிய நபரை மணப்பெண்ணின் சகோதரனும் அவரது நண்பர்களும் அடித்துக்கொன்ற சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள கங்ரல் அணை அருகே அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடப்பதாக அங்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டது சாகு (25) என்பவரும் அவரை அவரது உறவினர்களே கொலை செய்ததும் தெரியவந்தது.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்கப்பட்ட விருந்தில் சாப்பாடு குறைவாக பரிமாறப்பட்டதாக பெண் வீட்டாரிடம் சாகு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணப்பெண்ணின் சகோதரனும், அவரது நண்பர்கள் இருவரும் சாகுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். சாகுவை கங்ரல் அணை அருகே வரவழைத்த மூன்று பேரும் சாகுவின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

கொலை நடந்து 5 நாட்களுக்கு பிறகே போலீசார் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். கொலையில் ஈடுபட்ட மணப்பெண்ணின் சகோதரன் ஹிதேஷ், அவரது நண்பர்கள் கோமேஷ் மற்றும் தீபக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்