Published : 30,Apr 2019 04:47 AM

ஹாலிவுட் நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான் காலமானார்

Actor-Jessie-Lawrence-Ferguson-passes-away

ஹாலிவுட் நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான் கலிபோர்னியாவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 76.

’குட் பை குருயல் வோல்ட்’,  ‘தி சூப்பர்நேச்சுரல்ஸ்’, ’பிரின்ஸ் ஆப் டார்க்னஸ்’, ‘தி பிரசிடோ’, ’டார்க் மேன்’, ’பாய்ஸ் இன் த ஹூட்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான். படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அவர், கலிபோர்னியாவில் தனது மகன் ஜேஸூடன் வசித்து வந்தார். தனது வீட்டில் நேற்று காலமானார்.

‘’அவர் வலிமை வாய்ந்த, அழகான, புத்திசாலித்தனமான கருப்பு மனிதர். மற்ற எல்லோரையும் விட தன் மகன் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்’’ என்று தெரிவித்துள்ளார், அவர் மகன் ஜேஸ். ’இது சந்தேக மரணம் அல்ல, இயற்கை மரணம்தான்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்