Published : 29,Apr 2019 07:04 AM

“நான்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு” - விஜயகாந்த்

dmdk-supports-admk-candidate-in-4-constituency-bye-election

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக ஆதரவு தெரிவிக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக நிர்வாகிகள் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக, 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்தது. தற்போது 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுகவிற்கே தேமுதிக மீண்டும் ஆதரவு கொடுத்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்