
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க, தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆயிரத்து 200 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் திரைப்படத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் தலைமையிலா ன அணி நிர்வாகம் செய்துவருகிறது. இவர்களின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. புதிய நிர்வாகிகளை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக, விரைவில் பொதுகுழு கூடி முடிவு செய்ய இருக்கிறது.
இந்நிலையில் ரூ.7 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக, விஷால் தலைமையிலான அணி மீது, எதிர்த்தரப்பினர் புகார் கூறி வருகின்றனர். இது தொடர்பான பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டுப் போட்ட சம்பவமும் நடந்தது. இதற்கிடையே, விஷாலுக்கு எதிரான தயாரிப்பாளர்கள் சிலர், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து, சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமிக்கும்படி கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க, கூட்டுறவுத்துறை மாவட்ட அதிகாரி யான என்.சேகரை வணிகவரித்துறை நியமித்தது. இவரது நியமனத்துக்கு எதிராக, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணா, மே 1 ஆம் தேதி முதல், விடுமுறை என்பதால் இந்த வழக்கை அவசர வழக் காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்பு கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக் கை நாளை விசாரிக்கப்பதாகத் தெரிவித்தார்.