இணைய விரும்பவில்லை... செம்மலை சொல்லும் புதுச்சிக்கல்

இணைய விரும்பவில்லை... செம்மலை சொல்லும் புதுச்சிக்கல்
இணைய விரும்பவில்லை... செம்மலை சொல்லும் புதுச்சிக்கல்

எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய தொண்டர்கள் விரும்பவில்லை என ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த செம்மலை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அதிமுக தொண்டர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் செம்மலை, எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய வேண்டாம் என தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறினார். சட்டமன்ற தலைமையை விட தொண்டர்களின் மனநிலைதான் முக்கியம். தொண்டர்களின் கருத்தை பன்னீர்செல்வத்திடம் தெரிவிப்போம் என செம்மலை கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தால் போதும். நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழல் ஏற்படும் என்றார். ஊழலற்ற ஆட்சியை ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே தர முடியும். பேச்சுவார்த்தை நடந்தால் நல்லதே நடக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக செம்மலை கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com