[X] Close

இறந்தவர்களில் 65 பேரிடம்தான் நிலம் இருந்தது: முதலமைச்சர் பழனிசாமி தகவல்

CM-Palanisamy-speech

விவசாயிகள் மரணம் குறித்து ஆய்வு செய்ததில் இறந்தவர்களில் 65 பேரிடம்தான் நிலம் இருந்தது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கடுமையான வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 சதவிகிதத்திற்கும் மேல் மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு கணக்கீட்டின்படி வறட்சி நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் விவசாயிகளின் இன்சூரன்ஸ் தொகையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரணத் தொகையிலிருந்து ஏதேனும் விவசாயி விடுவிக்கப்பட்டால் அவர்கள் அந்த பகுதியில் உள்ள வட்டாட்சியரிடம் முறையிட்டால் அவர்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

ஆங்காங்கே விவசாயிகள் இறந்துவிட்டார்கள் என்ற பத்திரிகை செய்தி வரும் போது, அரசு அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து அவர்கள் எந்தெந்த காரணத்திற்காக இறந்தார்கள் என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைத்த தகவலில், இறந்தவர்களில் 65 பேருக்கு மட்டும்தான் விவசாய நிலங்கள் இருந்திருக்கிறது. வறுமையின் காரணமாகவோ இல்லை வேறு ஏதேனும் காரணமாகவோ அவர்கள் இறந்திருக்கிறார்கள் அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிலமே இல்லாமல் இறப்பவருக்கு கூட நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை.


Advertisement

விவசாயிகளின் கோரிக்கைகைளை ஏற்று ஆங்காங்கே உள்ள ஏரி குளங்களில் உள்ள வண்டல் மண்ணை அள்ளுவதற்கு அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. நஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளென்றால் 1 ஏக்கருக்கு 25 யூனிட் வண்டல் மண்ணை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். புன்செய் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 1 ஏக்கருக்கு 30 யூனிட் வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம். ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு எந்தவித தடையும் இல்லாமல் அவர்களுக்கு அரசு தேவையான உத்தரவு வழங்கியுள்ளது என்றும் பழனிசாமி தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close