சட்டமன்ற பேரவைத் தலைவர் நடுநிலைமை தவறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக சார்பில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆகியோர், டிடிவி தினகரன் கட்சியில் பொறுப்பு வகிப்பதாக கூறி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் மனு அளித்தார். தனிடையே தாங்கள் இன்னும் அதிமுகவில்தான் இருப்பதாக 3 எம்எல்ஏக்களும் கூறியுள்ளனர். நோட்டீஸ் அனுப்பப்பட்டால் சட்டப்பூர்வமாக சந்திக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், சட்டமன்ற பேரவைத் தலைவர் நடுநிலைமை தவறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக சார்பில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும்''தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வி அடையும் என்பதால் இருக்கிற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோகும் நிலை உள்ளது என்றும் இதனால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனு மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட்டு பதவியில் தொடர்வதை அனுமதித்திருக்கும் பேரவைத் தலைவர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு கொல்லைப்புற வழியாக மெஜாரிட்டி தேடித்தர முயலக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பேரவைத் தலைவர் நடுநிலை தவறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பேரவைத் தலைவர் மீது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்