Published : 26,Apr 2019 01:45 PM
மனைவியை சேர்த்து வைக்க வேண்டி கணவன் தற்கொலை முயற்சி

ஈரோட்டில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி தற்கொலை செய்துகொள்ள முயன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் செல்லதுரை. லாரி ஓட்டுநரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மோசிக்கீரனார் வீதியை சேர்ந்த நிர்மலா என்கிற பெண்னை ஃபேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் செல்லதுரை மது பழக்கத்திற்கு அடிமையானதாக சொல்லப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே செல்லதுரை ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்ற தகவல் நிர்மலாவிற்கு தெரியவந்துள்ளது.
இதனால் செல்லதுரையை விட்டு பிரிந்து சென்று தனது வீட்டில் நிர்மலா வசித்துள்ளார். இந்நிலையில் பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்துக் வைக்கோரி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்லதுரை முறையிட்டுள்ளார்.
அத்துடன் நிர்மலா வீட்டின் முன்பாக சென்ற செல்லதுரை, மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அவரைத் தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள், அவரைக் காப்பாற்றுவதற்காக கட்டி வைத்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு நகர காவல்நிலைய போலீஸார், தற்கொலை மிரட்டல் விடுத்த செல்லதுரையை கைது செய்தனர்.