இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று 7 இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.பின்னர் செயலிழக்கம் செய்துபோது ஒரு குண்டு வெடித்தது. இந்தச் சம்பவங்களில் 350க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக இலங்கையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும், தங்கள் நாட்டினர் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில நாடுகளும் தங்கள் குடிமக்களை இலங்கை செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் இலங்கையின் அண்டை நாடான இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலைத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்படுகின்றன. நிலையத்திற்குள் வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் ரயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சுமார் 200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி மற்றும் நெல்லையிலுள்ள ரயில் நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் பொருள்கள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி பயணிகளுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Loading More post
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!