Published : 26,Apr 2019 03:46 AM

'வதந்தி பரப்பினால் கடும் ‌நடவடிக்கை' : சிறப்பு டிஜிபி விஜயகுமார்

special-DGP-Vijayakumar-has-ordered-the-police-to-take-action-under-the-thief-s-law-if-it-is-rumored-about-the-case-of-Ponparappi-issue

பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு, தமிழக சிறப்பு டிஜிபி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக மோதல் ஏற்பட்டது. இதனால் மற்றொரு தரப்பினர் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, கலவரத்தை மேலும் தூண்டும் வகையில் வாட்ஸ் அப் வீடியோ வெளியிட்டதாக விருத்தாசலத்தைச் சேர்ந்த சிவக்குமார் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

Related image

இந்த நிலையில் பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சிறப்பு டிஜிபி விஜயகுமார் எச்சரித்துள்ளார். வதந்தி பரப்புவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்