நாமக்கல்லில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த புகாரில் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் அவிநாசியில் உள்ள ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா குழந்தைகளை விற்பனை செய்து வருவது தொடர்பான ஆடியோ வெளியானது. இதுதொடர்பான புகாரில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருளரசு, ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அமுதாவிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது சேலத்தில் இருந்து ஒரு குழந்தையையும், கொல்லிமலையில் இருந்து 2 குழந்தைகளையும் விலைக்கு வாங்கி விற்பனை செய்ததாக அமுதா வாக்குமூலம் அளித்தார் என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதில், ஒரு குழந்தையை ஓசூர் பகுதியில் தம்பதியருக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர் விசாரணையையடுத்து செவிலியர் அமுதாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், குழந்தையை கடத்த உதவியாக இருந்ததாக அவரது கணவர் ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அமுதாவிடம் விசாரணை நடத்துமாறு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியமுக்கு, சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டிருந்தார்.
Loading More post
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!