[X] Close

உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல், ரஸல் சேர்ப்பு, பொல்லார்ட்டுக்கு வாய்ப்பில்லை

Andre-Russell-in-West-Indies-World-Cup-squad--Kieron-Pollard-misses-out

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரே ரஸலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிரடி வீரர் பொல்லார்ட், சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான உத்தேச அணிகளின் பட்டியலை ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருந் தது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை ஏற்கனவே அளித்து விட்டன. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடைசி அணியாக வீரர்களின் பட்டியலை, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் ஐசிசி-யிடம் சமர்ப்பித்தது. 


Advertisement

அதில், ஐபிஎல். தொடரில் மிரட்டும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் மீண்டும் திரும்பியுள்ளார். அதிரடி வீரர் பொல்லார்ட், சாமுவேல்ஸ், சுழற் பந்துவீச்சாளர் சுனில் நரைன் ஆகியோருக்கு வாய்ப்பில்லை. 39 வயதான கிறிஸ் கெய்லுக்கு வாய்ப்பு வழங் கப்பட்டுள்ளது. இது அவருக்கு 5-வது உலக கோப்பை போட்டி.

அணி விவரம்:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் அலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், எவின் லெவிஸ், அஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமர் ரோச், ஆந்த்ரே ரஸல், ஒஷானே தாமஸ்.
 


Advertisement

Advertisement
[X] Close