பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 42வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் பார்த்தீவ் படேல், விராத் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
கோலி 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பார்த்தீவ் 24 பந்தில் 43 ரன்கள் எடுத்து முருகன் அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
பெங்களூரு அணி 6 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது. டிவில்லியர்ஸ் ஒரு புறம் நிதானமாக விளையாட மொயின் லி 4, நாத் 3 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 81 ரன்னில் பெங்களூர் 4 விக்கெட் இழந்தது. பின்னர், டிவில்லியர்ஸ் உடன் ஸ்டொய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர்.
டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். கடைசி நேரத்தில் சிக்சர் மழை பொழிந்தார். ஆட்ட நேர முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்கள் குவித்தும் ஸ்டொய்னிஸும் 24 பந்தில் 43 ரன்கள் அடித்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் கே.எல்.ராகு ல் (27 பந்தில் 42 ரன்), கிறிஸ் கெயில் (10 பந்தில் 23 ரன்) மயங்க் அகர்வால் (21 பந்தில் 35 ரன்) பூரன் (28 பந்தில் 46 ரன்) ஆகி யோர் சிறப்பாக ஆடினர். இதனால் 17 வது ஓவர் வரை பஞ்சாப் அணி, வெற்றியின் பக்கம் இருந்தது. ஆனால் அடுத்து பெங்களூரு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி, பஞ்சாப் வீரர்களை சாய்த்தனர். இதனால், 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதையடுத்து 17 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் சைனி 2 விக்கெட்டும் ஸ்டோயினிஸ், முகமது அலி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அதிரடியாக 82 ரன் குவித்த டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பெங்களூரு அணி பெற்ற 4 வது வெற்றி இது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி