Published : 24,Apr 2019 03:20 AM
நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நகை கொள்ளை

இமான் அண்ணாச்சி வீட்டில் இருந்த 41 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் இமான் அண்ணாச்சி. இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்து வருகிறார்.
2006 இல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். வேட்டைக்காரன், மரியான், நையாண்டி, ஜில்லா, கயல், காக்கி சட்டை, புலி போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை மாயமாகியுள்ளது. வீட்டில் ஆட்கள் இருந்த நிலையில் பீரோவில் இருந்த நகைகளை காணவில்லை என இமான் அண்ணாச்சி புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு திநகரில் உள்ள நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை போனதும் குறிப்பிடத்தக்கது.