இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. 300 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈஸ்டர் தினமான இன்று, இலங்கை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்வதவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. கொச்சிக்கடை தேவாலயம், கட்டுவப்பிட்டிய தேவாலயம், கிங்ஸ்பெரி தேவாலயம், பட்டிகலோயா வில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடித்தது. இதில், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுதவிர ஷாங்ரி லா, சின்னமன் கிராண்ட் ஆகிய ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. மொத்தம் ஆறு இடங்க ளில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்களில் கூடுதல் பாது காப்பு போடப்பட்டுள்ளது. இந்த தொடர் குண்டுவெடிப்பு அங்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்