[X] Close

இலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி?

Bomb-Blast-at-six-places-in-srilanka

இலங்கையில் மொத்தமாக 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

ஈஸ்டர் தினமாக இன்று பலரும் இலங்கையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தமாக 4 தேவாலயங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்ததாக தெரிகிறது. கொச்சிக்கடை தேவாலயம், கட்டுவப்பிட்டிய  தேவாலயம், கிங்ஸ்பெரி தேவாலயம்,  பட்டிகலோயாவில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் சிதறி ஓடினர்.


Advertisement

இதுதவிர ஷாங்ரி லா, சின்னமன் கிராண்ட் ஆகிய ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில்  25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அத்துடன் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீட்டிற்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close