Published : 27,Apr 2017 06:24 AM
எமிரேட்ஸில் இனவெறி: பாகுபலி தயாரிப்பாளர் பகீர்

எமிரேட்ஸ் விமான ஊழியர்கள் இனவெறியுடனும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டதாக பாகுபலி படத் தயாரிப்பாளர் ஷோபு தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியுள்ள ’பாகுபலி 2’. பிரபாஸ்,ராணா, அனுஷ்கா, தமன்னா நடித்துள்ள இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக படக்குழு ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் துபாய் சென்றது. பின்னர் எமிரேட்ஸ் விமானத்தில் ஐதராபாத் திரும்பியது. அப்போது விமான ஊழியர்கள் இனவெறியுடனும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டதாக பாகுபலி 2 படத் தயாரிப்பாளர் ஷோபு கூறியுள்ளார்.
இதுபற்றி டிவிட்டரில், ‘எமிரேட்ஸ் விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன். பி3 கேட்டில் இருந்த விமான ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். தேவையில்லாமல் எங்கள் படக்குழுவை துன்புறுத்தியது. ஒரு ஊழியர் இனவெறியுடன் நடந்துகொண்டார். எமிரேட்ஸ் விமானத்தில் அடிக்கடி பயணிக்கிறேன். இப்போதுதான் முதல்முறையாக இதுபோன்ற நடத்தைகளை எதிர்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.