[X] Close

“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு  

Tamil-actor-vadivelu-casts-his-vote-in-chennai

இந்தத் தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு விடிவுகாலம் வருமென நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் காலை 3 மணி நிலவரப்படி 52.02% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று மக்களுக்கு நாம் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். 


Advertisement

யாருக்கு ஓட்டு போட வேண்டுமென்பதை வீட்டிலுள்ள இளைஞர்கள் பெரியவர்களுக்கு சொல்கிறார்கள். இந்தத் தேர்தல் வித்தியாசமானது. இந்தத் தேர்தல் முடிந்தவுடன் கடுமையான மழை பெய்யுமென நினைக்கிறேன். ஏனென்றால் இந்தத் தேர்தலுக்கு பிறகு எல்லாருக்கும் விடிவுகாலம் வரும்.  

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. யார் வெற்றி பெற்றாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள். மக்கள் கண்ணீர் சிந்தாமல் வாழ வேண்டும்'' என்றும் தெரிவித்தார்.


Advertisement

இந்தத் தேர்தலில் வாக்குச் சேகரிக்க ஏன் வரவில்லை, ஏதாவது கட்சி ஆதரவுக்காக அணுகியதா என்ற கேள்விகளுக்கு வடிவேலு பதில் அளிக்கவில்லை. 


Advertisement

Advertisement
[X] Close