[X] Close

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது: பிரேமலதா

Vellore-polls-cancellation-is-not-acceptable---Premalatha

வேலூரில் தேர்தல் ரத்துச் செய்யப்பட்டதை ஏற்க முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அவர் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலாதாவும் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேர்தல் கமிஷன் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதாக பாராட்டுத் தெரிவித்தார்.


Advertisement

அவர் மேலும் கூறும்போது, ‘’ தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதாக சொல்கிறார்கள். அதை சரிசெய்யும் வேலைகள் நடந்து வருகிறது. அதிமுக கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் 18 இடைத்தேர்தலிலும் நிச்சயமாக வெற்றி பெறும். வருமான வரித் துறை சோதனை பற்றி கேட்கிறீர்கள். கிடைத்த தகவலின் அடிப்படையில் நடந்ததுதான் அந்த சோதனை. அது பழிவாங்கும் நோக்கமல்ல. இந்த ரெய்டில் கோடி கணக்கான ரூபாய் பிடிக்கப்பட்டிருக்கிறது. 

இது ஜனநாயகத்துக்கே தலைகுனிவு. ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஜெயிப்பதை விட சும்மா இருக்கலாம். இது பெரும் தவறு. வேலூரில் ரத்து ஆனதை ஏற்க முடியாது. தவறு செய்த வேட்பாளர், அதாவது துரைமுருகன் மகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமே தவிர, தேர்தல் ரத்து என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்போது அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் எங்கள் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கண்டிப்பா வெற்றி பெறுவார். எல்லா தொகுதிக்கும் சென்று வந்தேன். அனைத்துத் தொகுதியிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்’’ என்றார். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close