Published : 27,Apr 2017 04:05 AM

ஜம்மு காஷ்மீரில் சமூக வலைதளங்களுக்கு தடை

Facebook--Twitter--other-social-media-banned-in-Kashmir

பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உட்பட 22 சமூக ‌வலைதளங்களை ஜம்மு காஷ்மீர் அரசு தடை செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வன்முறைகளை தூண்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட 22 சமூக வலைதளங்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்