[X] Close

அமமுக நிர்வாகி கடையில் இருந்து 1.5 கோடி ரூபாய் பறிமுதல் !

Rs-1-5-crore-money-seized-in-ammk-supporter-house

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க வந்த போலீசாருக்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற வருமான வரி சோதனையில், அமமுக ஆதரவாளரின் கடையில் இருந்து கட்டுக்கட்டாக ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பரப்புரை நேற்று முடிவடைந்த நிலையில், ஆண்டிபட்டியில் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பணப்பட்டுவாடாவை தடுக்க அமமுக கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த காவலர்களை, கட்சி நிர்வாகிகள் தடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் காவல்துறையினர் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், பணத்தை வைத்திருந்தவர்கள் தாக்க முற்பட்டதால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார். அதிக பைகளில் பணம் இருப்பதால் அதனை வருமான வரித்துறையினர் கைப்பற்றி ஆய்வு நடத்திவருவதாகவும் அவர் கூறினார்.


Advertisement

தொடர்ந்து நடைபெற்ற வருமான வரி சோதனையில், அமமுக அலுவலகத்திற்கு அருகேயிருந்த அக்கட்சியின் ஆதரவாளரின் கடையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் என்று கூறப்படுகிறது. அந்த கட்டுகளின் மேலே எவ்வளவு பணம் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை எண்ணினர். இதில் ஒன்றரை கோடி ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. வாக்காளர்களுக்கு 300 ரூபாய் வீதம் விநியோகிக்கப்படுவதற்காக அமமுக ஆதரவாளர் கடையில் வைத்து பணப்பட்டுவாடா நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close