வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால் இந்த அதிரடி உத்தரவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது கதிர் ஆனந்த் வீட்டில் முக்கிய ஆவணங்களும், 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு இம்மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீட்டிலிருந்து 11 கோடியே 48 லட்ச ரூபாய் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தன. இந்நிலையில் தான் தேர்தலை ரத்து செய்து இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய துரைமுருகன், “வேலூரில் தேர்தலை ரத்து செய்திருப்பது ஒரு ஜனநாயக படுகொலை. எதிர்கட்சிகளை தேர்தலில் பயமுறுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு நடவடிக்கை. இதுவே என்னுடைய பார்வை. மோடி அரசுக்கு முடிவுகட்ட மக்களுக்கு ஒரு சரியான வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்தார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்