கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமியோ, திமுக தலைவர் ஸ்டாலினோ பேசக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்தும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஸ்டாலின் தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து கோடநாடு சம்பவம் குறித்து ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இதுபோல் தொடர்ந்து பேச வேண்டாம் என ஸ்டாலினுக்கு அறிவுறுத்தி வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததுடன், தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், கோடநாடு சம்பவம் குறித்து ராமநாதபுரம், தென்சென்னை, சோழிங்கநல்லூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் தொடர்ந்து பேசி வருவதாக கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில் ஸ்டாலின் தொடர்ந்து பேச தடை விதிக்க வேண்டுமெனவும், நீதிமன்ற வாய்மொழி உத்தரவை தொடர்ந்து மீறுவதால் அவமதிப்பு சட்டத்தில் தண்டிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கோடநாடு குற்றவழக்கில் தொடர்பில்லாத நிலையில், இருவருமும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி ஏன் பேசவேண்டுமென கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமியோ, திமுக தலைவர் ஸ்டாலினோ பேசக்கூடாது என உத்தரவிட்டார்.
பின்னர் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க கோரியும், ஸ்டாலினை நீதிமன்ற அவமதிப்பின் கீழ் தண்டிக்க கோரியும் தமிழக அரசு தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை முடித்து வைத்தும் உத்தரவிட்டார். மேலும், சென்னை சிறப்பு நீதிமன்றத்திலுள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரும் ஸ்டாலின் மனுவை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!