தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பேசியதாக ஆசம் கான், மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இன்னும் 6 கட்டங்கள் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைவர்கள் ஒருவரை ஒருவர் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே, தேர்தல் விதிமுறைகளை மீறி பரப்புரையில் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. அதேபோல், மதரீதியான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்குகளை சேகரிப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி ஆகிய இருவரும் மத ரீதியான பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. நாளை காலை 6 முதல் 72 மணி நேரத்திற்கு உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதேபோல், ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு பரப்புரை செய்ய மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த நேரத்தில் அவர்கள் நேரடியாகவோ தொலைக்காட்சியிலோ பேட்டி அளிப்பது, வேறு ஏதாவது முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பேசியதாக சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான் 3 நாட்கள் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அநாகரீகமாக, தரக்குறைவாக பேசியதற்காக அவருக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 நாட்கள் பரப்புரையில் ஈடுபடவும் தடை விதித்தது தேர்தல் ஆணையம். முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக இவருக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai