Published : 26,Apr 2017 04:37 PM
டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இமாலய வெற்றியைத் தந்துள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மியை பின்னுக்கு தள்ளி பாரதிய ஜனதா கட்சி 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. 181 வார்டுகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. இது ஏற்கனவே பாரதிய ஜனதா வசமிருந்த 138 வார்டுகளைவிட அதிகம். ஆம் ஆத்மி கட்சி 39 வார்டுகளில் வெற்றியுடன் இரண்டாவது இடம் பிடித்தது. காங்கிரசுக்கு 26 வார்டுகள் கிடைத்தன.
இந்நிலையில் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இமாலய வெற்றியை தேடி தந்துள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பறைசாற்றுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கட்சியினரின் அயராத உழைப்பையும் பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.