[X] Close

தமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு

Election-campaign-ends-in-Tamilnadu-tomorrow

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் ஓய்கிறது.


Advertisement

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களோ கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பரப்புரை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது. பரப்புரை ஓய்ந்த பின் தேர்தல் தொடர்பாக வெளியூரை சேர்ந்தவர்கள் விடுதிகள், மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.


Advertisement

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதி பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close