Published : 26,Apr 2017 12:37 PM

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

DA-Hiked-to-TN-government-staffs

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்சமாக 244 ரூபாய் முதல் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 80 ரூபாய் வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். ஓய்வூதியதார்களுக்கு 122 ரூபாய் முதல் ஆயிரத்து 540 வரை கூடுதலாக கிடைக்கும். ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்