[X] Close

ஆஸ்திரேலிய இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச்சூடு!

Shooting-at-Australia-nightclub-leaves-1-dead--1-critical

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இரவு விடுதி ஒன்றின் வெளியே சரமாரியாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாய மடைந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், பிரஹ்ரான் (Prahran) என்ற பகுதியின் புறநகரில் லவ் மெஷின் என்ற இரவு விடுதி உள்ளது. இந்த விடுதியின் வெளியே, இன்று அதிகாலை 3.20 மணியளவில் சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பலர் இந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. சினிமாவில் வருவது போல, மாறி மாறி துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதை அடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.


Advertisement

இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் தெரியவரவில்லை. இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமா என்பது பற்றியும் போலீசார் தெரி விக்கவில்லை. விசாரணை நடந்துவருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அரிது என்பதால் அங்கு பீதி கிளம்பியுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close