மேற்குவங்கத்தில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் பங்கேற்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
டார்ஜிலிங் தொகுதிக்குட்பட்ட சிலிகுரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொள்வதாக இருந்தது. இதற்காக, அவர் ஹெலிகாப்டர் மூலம் சிலிகுரி செல்லவும் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிலிகுரியில் உள்ள மாநகர காவல் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த மைதானத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அனுமதி அளிக்கப்படவில்லை என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ராகுல் காந்தியின் பரப்புரையை திட்டமிட்டு தடுப்பதாக, காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காவல் துறையினர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், கடைசி நேரத்தில் தடைவிதிப்பதாக டார்ஜிலிங் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் சங்கர் மலகார் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை அனுமதி மறுப்பு காரணமாக ராகுல் காந்தியின் பரப்புரைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!