[X] Close

டெட் தேர்வு ! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Today-is-the-last-date-for-TET-registration

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ‌ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி‌ பெறவேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் வெளியிட்டது. 


Advertisement

www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.  ஆனால் இணையதளம் சரிவர வேலைசெய்யாததால் விண்ணப்பிக்க முடியவில்லை என தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து ஏப்ரல் 12 வரை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி  ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். 


Advertisement

கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement
[X] Close