யோகி ஆதித்யாநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

யோகி ஆதித்யாநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
யோகி ஆதித்யாநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. அதோடு, ஆந்திரா, சிக்கிம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட்டன.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, உத்தரபிரதேசத்தின் தியோபந்தில் கடந்த 7 ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்டபோது, ‘காங் கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்கக்கூடாது. ஏனென்றால் மாநிலத்தில் பா.ஜனதாவை எதிர்க்கும் ஒரே கூட்டணி, நாங்கள்தான். எங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்’’ என்றார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி மாயாவதி இப்படி பேசியுள்ளதாக, தேர்தல் ஆணையத் திடம் பாஜக புகார் கூறியது. 

அதே பகுதியில் பரப்புரை மேற்கொண்ட மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், ‘’காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இஸ்லாமியர்கள் மீது நம்பிக்கை இருந்தால், எங்களுக்கு அனுமன் மீது நம்பிக்கை இருக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இருவரும் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாகவும், அதற்குள் விரைவில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com